வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியால் விபரீத முடிவு
கும்மிடிப்பூண்டி அருகே காதல் தோல்வியால் வடமாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ரனு குமார் (வயது 19). இவரது சகோதரர் சோனு குமார் (22). இவர்கள் 2 பேரும் கும்மிடிப்பூண்டி அடுத்த விவேகானந்தா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் ரனுகுமார் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவரது சகோதரரும் மற்றொரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இதில் ரனுகுமார் பீகாரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்து உள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் ரனுகுமாரின் காதலி திடீரென அவருடன் பேச மறுத்து காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரதி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story