கோவில்பட்டி கால்பந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி வெற்றி
கோவில்பட்டி கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி யங் ஸ்டாட்ஸ் கால்பந்து கழகம் எழுவர் கால்பந்து போட்டியை வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தியது. போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணியும், விருதுநகர் ராம்கோ கால்பந்து கழக அணியும் மோதின. ஆட்ட நேரத்தில் 2 அணிகளும் கோல் போடாததால், பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கினார். 2-வது இடம் பிடித்த ராம்கோ கால்பந்து அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.3 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த தூத்துக்குடி லகான் கால்பந்து அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.1,000-ம், 4-வது இடம் பிடித்த தூத்துக்குடி வி.எப்.சி. அணிக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்.சிவா, தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை யங்ஸ்டார் கால்பந்து கிளப் தலைவர் செல்வகுமார், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் முத்து மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
-----------
Related Tags :
Next Story