எட்டயபுரம் அருகே விபத்தில் தொழிலாளி பலி


எட்டயபுரம் அருகே  விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 6 Sept 2021 6:21 PM IST (Updated: 6 Sept 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் தொழிலாளி பலியானார்.

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று எட்டயபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியசாமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  
இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது, சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான ஆற்காடு பகுதியை சேர்ந்த சுப்பன் மகன் சந்துரு (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story