தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 8:26 PM IST (Updated: 6 Sept 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்றதாக தூத்துக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்த சதாசிவன் மகன் பாரதிக்குமார் (வயது 23), குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தங்கமூர்த்தி (24), குளத்தூர் மேற்கு தெருவை சேர்ந்த மாரீஸ்வரன் (28), அதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சதுரகிரி (30), நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த இசக்கிமுத்து (40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story