ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்


ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில்  பட்டா கேட்டு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2021 8:37 PM IST (Updated: 6 Sept 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்

ஸ்ரீவைகுண்டம்:
தெய்வசெயல்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி மாவட்ட மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், நம்பிராஜன் ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர்  விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுபதிராஜாவிடம் மனுக்களை வழங்கினர். 
அந்த மனுவில், ‘ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட தெய்வசெயல்புரம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு பாத்தியப்பட்ட 915 ஏக்கர் நிலத்துக்கு அவர்களது பெயரில் தனித்தனியாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அந்த நிலங்களில் விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலங்கள் 230 குடும்பங்களுக்கு வாழ்வளிப்பவையாக உள்ளன. முறையாக நிலத்தீர்வை செலுத்தி உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. 
இந்த போராட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ராமசுப்பு உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story