தேனி கலெக்டர் அலுவலகத்தில் சொத்து பிரச்சினையில் பெண் தீக்குளிக்க முயற்சி


தேனி கலெக்டர் அலுவலகத்தில் சொத்து பிரச்சினையில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 6 Sept 2021 9:10 PM IST (Updated: 6 Sept 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சொத்து பிரச்சினையில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:
சின்னமனூர் நகராட்சி 7-வது வார்டை சேர்ந்த சின்னகருப்பன் மனைவி அமிர்தசெல்வி (வயது 37). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவர் ஒரு லிட்டர் பாட்டிலில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "எனது தந்தை சுடலை முத்து எங்களின் பூர்வீக சொத்தில் எனக்கு பங்கு கொடுக்காமல், சொத்தை எனது அண்ணனுக்கு கொடுத்து விட்டார். சொத்தில் பங்கு கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன்" என்றார். பின்னர் அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story