கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 6 Sep 2021 4:36 PM GMT (Updated: 6 Sep 2021 4:36 PM GMT)

நிலக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

நிலக்கோட்டை: 

நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட அணைப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி வரவேற்றார். இதில், அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரியா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story