வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 6 Sep 2021 4:37 PM GMT (Updated: 6 Sep 2021 4:37 PM GMT)

கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். மேலும் மாமியார், மருமகளிடமும் கைவரிசையை காட்டி சென்றார்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். மேலும் மாமியார், மருமகளிடமும் கைவரிசையை காட்டி சென்றார்.
மாமியார், மருமகளிடம் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகே ஆழியூர் ஊராட்சி, கடம்பர வாழ்க்கை நடுத்தெருவை சேர்ந்தவர் அயில்தாஸ். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 60). இவருடைய மருமகள் ரஞ்சிதா. சம்பவத்தன்று மாமியார், மருமகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் பத்மாவதி எழுந்து பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை காணவில்லை.
பின்னர் பத்மாவதி தனது மருமகள் ரஞ்சிதாவை பார்த்த போது ஒரு மர்ம நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலிைய அறுத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக தப்பி சென்றதை கண்டு சத்தம் போட்டுள்ளார்.
10 பவுன் நகை திருட்டு
இதை தொடர்ந்து அவர், வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நெக்லஸ், கைசெயின், மோதிரங்கள் உள்பட 6 பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
மேலும் நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் இருந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
வலைவீச்சு
இதுதொடர்பாக பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story