கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் வாழைகள் சேதம்


கச்சிராயப்பாளையம் பகுதியில்  சூறாவளி காற்றில் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 6 Sep 2021 5:14 PM GMT (Updated: 6 Sep 2021 5:14 PM GMT)

கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் வாழைகள் சேதம்

கச்சிராயப்பாளையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சின்னசேலம் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. 

காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கச்சிராயப் பாளையம் அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமகண்ணு என்பவருடைய நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் வாழைமரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. அதேபோல் பொட்டியம், மாயம்பாடி ஆகிய பகுதிகளிலும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. பிஞ்சு குலையுடனும் மற்றும் பூக்கும் பருவத்திலும் நின்ற வாழைமரங்கள் காற்றில் சேதம் அடைந்ததை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே சேதம் அடைந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story