கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக புகார்
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பலவிதமான குளறுபடிகள் உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்படாமலும், ஒரு வார்டில் வசிப்பவர்கள் பெயரை சம்மந்தமில்லாமல் இன்னொரு வார்டில் சேர்க்கப்பட்டும் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், எனவே அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஊராட்சி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து எழுந்து கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராமமக்கள் நடத்திய திடீர் தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story