பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டால் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டால் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2021 11:41 PM IST (Updated: 6 Sept 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டால் நடவடிக்கை

வேலூர்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி பேசுகையில், தமிழக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே அனைவரும் அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதில், இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story