கந்திலி ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்


கந்திலி ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 6 Sept 2021 11:48 PM IST (Updated: 6 Sept 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் மண்டலநாயனகுண்டா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் வந்தது. 
அதைத்தொடர்ந்து வேலூர் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் முரளிகண்ணன் உத்தரவின் பேரில் கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் திடீரென ரேஷன் கடையில் ஆய்வு செய்தார், அப்போது ரேஷன் கடையில் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில், உள்ளிட்ட பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது, 
இதனையொட்டி ரேஷன் கடை விற்பனையாளர் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

Next Story