ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாரதிநகர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேசுவரன். இவருடைய மனைவி நாகவள்ளி (வயது53).இவர் தனது சகோதரிக்கு மாத்திரை வாங்கிவிட்டு ரோமன் சர்ச் வருவதற்காக பாரதிநகரில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி வந்துள்ளார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டே கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ நகையை திருடி உள்ளனர்.இதுகுறித்து நாகவள்ளி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.