இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 7 Sept 2021 12:18 AM IST (Updated: 7 Sept 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

புதுச்சேரி, செப்.7-
புதுவையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). இவர், புதுவைக்கு சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.
இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Next Story