இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கந்தர்வகோட்டை நகர குழு சார்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியில் உள்ள சாலைகளை சீர் செய்ய கோரியும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து சுற்றுச்சுவர் அமைத்து கடைகள் கட்டி ஊராட்சி வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களுக்கு முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரக்கோரியும், ஊராட்சி குடிநீர் குழாய்களில் வருகிற குடி நீர் குடிப்பதற்கு தரமற்றதாக இருப்பதால் தரமான குடிநீர் வழங்க வலியுறுத்தியும், பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து அனுமதியின்றி போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் கலியபெருமாள், அரசப்பன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story