சுரண்டை:ெதாழிலாளிக்கு அரிவாள் வெட்டு
ெதாழிலாளிக்கு அரிவாள் வெட்டு
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (வயது 30). காய்கறி கடையில் தொழிலாளியாக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் பூபதி (19). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் சுரண்டை-சங்கரன்கோவில் ரோட்டில் மாடசாமி நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பூபதி, மாடசாமியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பூபதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடசாமியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரின் சுரண்டை போலீசார், பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story