பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விஷம் குடித்த ஊழியரால் பரபரப்பு


பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விஷம் குடித்த ஊழியரால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sept 2021 2:40 AM IST (Updated: 7 Sept 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விஷம் குடித்த ஊழியரால் பரபரப்பு

நெல்லை:
பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 39). இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி வரைபடவாளராக பணியாற்றி வருகிறார்.
மருதுபாண்டியன் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தார். அப்போது, அலுவலகத்தில் வைத்து அவர் திடீரென்று விஷம் குடித்தார். இதை பார்த்து அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருதுபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 
அப்போது, நேற்று காலையில் பணிக்கு வந்த மருதுபாண்டியன் அலுவலகத்தில் உள்ள மேலதிகாரியிடம் தனக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மருதுபாண்டியன் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
பரபரப்பு
எனினும் மருதுபாண்டியன் தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story