5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி பலி
பெண் குழந்தை 5 ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் இறந்தது.
மைசூரு: மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி (வயது 4). இவள் கடந்த வெள்ளிக்கிழமை கிரிகதானஹள்ளி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தாள். அங்கு வைத்து சிறுமி தனது கையில் 5 ரூபாய் நாணயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று சிறுமி 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கிவிட்டாள். இதனால் சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தாள். இதை கவனித்த குடும்பத்தினர் உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி விழுங்கிய நாணயத்தை மீட்க டாக்டர்கள் போராடினர். இருப்பினும் சிறுமி கவுசி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story