நெல்லை ரெயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகளை அந்த ரெயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மருத்துவ குழுவினர் திருவனந்தபுரம், குருவாயூர், பெங்களூரூ, மும்பை உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ரெயிலில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் மருத்துவ குழுவினர் ெரயில் நிலையத்தில் மெயின் வாசலில் செவிலியர்கள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்து அவர்களின் முகவரியினை பதிவு செய்தனர். இதற்காக பயணிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story