24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல்
விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகரில் 24 டன் ரேஷன் அரிசி, 1½ டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல்
விருதுநகர் பாண்டியன் நகரில் கண்ணன் (வயது 45) என்பவரது கிட்டங்கியில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு 50 கிலோ எடை கொண்ட 484 ரேஷன் அரிசி மூடைகளும், 50 கிலோ எடை கொண்ட 29 ரேஷன் கோதுமை மூடைகளும் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசி 24 ஆயிரத்து 200 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் கோதுமை 1450 கிலோ ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டங்கி உரிமையாளர் கண்ணன், வாடிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24), பாண்டியன் நகரை சேர்ந்த அழகு மூர்த்தி (44), பாத்திமா நகரை சேர்ந்த நாககுமார் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வேன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன்பொருள் பதுக்கலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி தொடர் விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள் மூடைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story