ஏர்வாடி அருகே கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்


ஏர்வாடி அருகே கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2021 2:55 AM IST (Updated: 7 Sept 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

ஏர்வாடி:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 25), பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆன்றோ (23), சாந்திநகரைச் சேர்ந்த அமீர் (21), மணிகண்டன் (24), கார்த்திகேயன் (21). இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் சம்பவத்தன்று ஒரு காரில் கூடங்குளத்திற்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை அமீர் ஓட்டினார்.
ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரம் பகுதியில் வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். கதிர்வேல், ஆன்றோ, அமீர் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், மணிகண்டன், கார்த்திகேயன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story