மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார்.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
மணல் தட்டுப்பாடு
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனி குவாரி பாதை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், காளை மாடுகளும் உணவின்றி சாவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
உள்ளூர் கட்டிட பணிக்கு தேவையான மணல் தட்டுப்பாட்டை உடனடியாக போக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story