நீலகிரியில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
நீலகிரியில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாராட்டினார்.
ஊட்டி
நீலகிரியில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாராட்டினார்.
நல்லாசிரியர் விருது
நீலகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ராஜேந்திரன் உள்பட 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
முக்கிய பணி
2020-21-ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது நீலகிரியில் பணிபுரிந்து வரும் 10 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் பணி என்பது மிகவும் ஒரு முக்கியமான பணியாகும். நாம் அனைவரும் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் ஆசிரியர்கள்தான்.
ஆசிரியர்கள் நமக்கு கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுத்தந்து உள்ளதால் நாம் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம். இதை எண்ணி ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் கடமை
மேலும் ஆசிரியர்கள் விருது பெறுவது என்பது பெருமை. அதிலும் நல்லாசிரியர் விருது வழங்குவது மிகவும் பெருமையாக உள்ளது. அனைத்து ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளும் நல்ல முறையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவது ஆசிரியர்களது கடமையாகும். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அனைவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வரவேற்றார். முடிவில் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story