சாட்சிகளுக்கு ரூ.8 ஆயிரம் செலவு தொகை வழங்க வேண்டும் விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு சேலம் மகளிர் கோர்ட்டு உத்தரவு


சாட்சிகளுக்கு ரூ.8 ஆயிரம் செலவு தொகை வழங்க வேண்டும் விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு  சேலம் மகளிர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Sept 2021 3:09 AM IST (Updated: 7 Sept 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

சாட்சிகளுக்கு ரூ.8 ஆயிரம் செலவு தொகை வழங்க வேண்டும் என்று விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு சேலம் மகளிர் கோர்ட்டு உத்தரவு

சேலம், 
சேலம் குமரகிரி ஏரிப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஈஸ்வரி என்கிற திருநங்கை கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், அன்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சாட்சிகள் 4 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். ஆனால் எதிர்தரப்பினர் ஆஜராகவில்லை.
இதையொட்டி அரசு வக்கீல் பத்மா, வழக்கு விசாரணைக்கு சாட்சிகள் வருகிறார்கள். ஆனால் எதிர் தரப்பினர் ஆஜராகவில்லை. எனவே கூலி வேலைக்கு செல்லும் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர் தரப்பினர் கோர்ட்டில் தற்போது ஆஜராகி உள்ள சாட்சிகள் 4 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 ஆயிரம் செலவு தொகை வழங்க வேண்டும் என்று  நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

Next Story