ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு சீரமைக்கும் பணி தீவிரம் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு


ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு சீரமைக்கும் பணி தீவிரம் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு
x

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

ஏற்காடு, 
மண் சரிவு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு சுமார் 127 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த மழையின் காரணமாக ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் காக்கம்பாடி கிராமம் அருகே சுமார் 100 மீட்டர் அளவிற்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. 
இந்த மண்சரிவு காரணமாக ஏற்காடு குப்பனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் ஒரு பக்கமாக சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்ல வழி செய்தனர். 
உதவி இயக்குனர் ஆய்வு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பிரபாகரன் சேதங்களை பார்வையிட்டார். அங்கு மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு தடுப்பு மற்றும் சாலை பலப்படுத்தும் பணி நடந்ததை ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, ‘மண் சரிவு ஏற்பட்ட மலைப்பாதையில் தற்காலிகமாக மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இங்கு சேதம் அடைந்த தடுப்பு சுவரை மீண்டும்’ என்றார். ஆய்வின் போது ஊராட்சி தலைவர் செந்தில் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story