சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Sep 2021 9:46 PM GMT (Updated: 6 Sep 2021 9:46 PM GMT)

அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
சிறப்பு பூஜை 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில்  சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 
ெதாடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தர மகாலிங்கம் சுவாமி காட்சியளித்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி பூஜை நடைபெற்றது. 
நேர்த்திக்கடன் 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து சென்றனர். 
பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அடிவாரப்பகுதியில் மொட்டைபோட்டு ேநர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை  கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர். தோப்புகளில் பக்தர்கள் யாரும் தங்காமல் இருக்க கண்காணிப்பு பணியில்  வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

Next Story