தேனி நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தேனி நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2021 5:18 PM IST (Updated: 7 Sept 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

தேனி நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான குடிநீர் கட்டணம் ஒரு ஆண்டுக்கு ரூ.600 என்று இருந்ததை ரூ.2,820 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் கட்டணம் ரூ.1,200 என்று இருந்ததை ரூ.8 ஆயிரத்து 460 எனவும் நகராட்சி நிர்வாகம் உயர்த்தியது. இந்த கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு கட்டணம் செலுத்தக்கோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்தது. அதன்படி, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். குடிநீர் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள், நகராட்சி ஆணையாளர் சுப்பையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story