சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் ஞான புஷ்பம் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதிய அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது பணி ஓய்வு தொகையை அதே மாதத்தில் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.7800 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ஈஸ்வரி, பொருளாளர் கண்ணஞ்சி, மாவட்ட இணைச் செயலர் ஜெயந்தி உள்பட ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்றுமாலை சத்துணவு ஊழியர் சங்க, வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் ரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வட்டார செயலாளர் எஸ்.கே.பழனிசாமி கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் வட்டார பொருளாளர் தேன்மொழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story