விவசாயிகள் போராட்டம்
பண்ணைக்கிணர் ஊராட்சியில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமங்கலம்
பண்ணைக்கிணர் ஊராட்சியில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைமடை பகுதி
பி.ஏ.பி. பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.பி.ஏ.பி பாசனம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. பி.ஏ.பி பாசனத்தில் புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பி.ஏ.பி பாசனத்தில் நான்காம் மண்டலத்தில் 2ம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பண்ணைக்கிணர் ஊராட்சி கோழிகுட்டை பகுதியில் பகிர்மான கால்வாயில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உடுமலை போலீஸ் துணைசூப்பிரண்டு தேன்மொழிவேல் குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உதவி செயற்பொறியாளர் காந்திதுரை ஆகியோர் பாசனப்பகுதிகளை பார்வையிட்டனர்.
சீரமைப்பு பணிகள்
பகிர்மான கால்வாயைவிட விளைநிலங்கள் உள்ள பகுதி மேட்டு பகுதியாக இருப்பதால் விளைநிலங்களுக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. பொக்லைன் எந்திரம் மூலம் மேட்டு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பகிர்மான கால்வாய் சரி செய்யப்பட்டு கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லும் வகையில சீரமைக்கப்படும் எனக்கூறியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story