வல்லநாடு வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


வல்லநாடு வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Sept 2021 5:44 PM IST (Updated: 7 Sept 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
வல்லநாடு நாணல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கிபாண்டி (வயது 22). இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில், கடந்த 12.9.2019 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முறப்பநாடு பக்கபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கடந்த 11.8.2021 அன்று முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மாரிமுத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிமுத்தை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சேலம் ஜெயிலில் வழங்கினார்.


Next Story