தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2021 8:10 PM IST (Updated: 7 Sept 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:
மானாமதுரை வக்கீல் சங்க செயலாளர் குரு முருகானந்தம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தேனியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story