மாமனார் வீட்டில் நகை, பணம் திருடிய வேன் டிரைவர் கைது
மாமனார் வீட்டில் நகை, பணம் திருடிய வேன் டிரைவர் கைது
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூரில் திண்டிவனம் சாலையில் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் ராமன் (வயது 44). விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமன் வீட்டின்பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் ராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில் ராமனின் மகள் கோமதியின் கணவரான சென்னை திருவேற்காடு பகுதியைசேர்ந்த வேன் டிரைவர் விஜய்குமார் (24) என்பவர் வீட்டின்பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நகை, பணம் திருடியதை விஜய்குமார் ஒப்புக்கொண்டார். அதன்பேரில், கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப் இன்ஸ்பெக்டர், ரவிச்சந்திரன் ஆகியோர் விஜயகுமாரை கைதுசெய்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
Related Tags :
Next Story