விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும்


விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 7 Sept 2021 11:18 PM IST (Updated: 7 Sept 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனுமதி பெறப்படாத வியாபார நோக்கத்திற்கான விளம்பரங்கள், அரசியல் பிரமுகர் வருகை சார்ந்த விளம்பரங்கள், சுபநிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களாக இருந்தாலும் அந்த விளம்பர பலகைகள், பதாகைகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து அவற்றை வருகிற 20-ந் தேதிக்குள் அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அகற்றப்பட்ட விளம்பர பதாகைகள் குறித்த விவரத்தை தினசரி அறிக்கையாக மாவட்ட வருவாய் அலுவலரிடமும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் அகற்றப்பட்ட விளம்பர பதாகைகள் குறித்த விவரத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடமும் சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story