வால்பாறை பகுதியில் தொடர்மழை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


வால்பாறை பகுதியில் தொடர்மழை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 7 Sept 2021 11:19 PM IST (Updated: 7 Sept 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

தொடர்மழை 

வால்பாறை பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.
 
இந்த அணை கடந்த 29-ந் தேதி 2-வது முறையாக மீண்டும் நிரம்பியதால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் சென்று வருகிறது. 

ஆர்ப்பரித்து கொட்டுகிறது 

இதன் காரணமாக சேடல்டேம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் இந்த ஆற்றில் உள்ள அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

ஏற்கனவே இந்த அருவியில் குளித்த பயிற்சி டாக்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

மழையளவு 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில்  காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லிமீட்டர்) விவரம் வருமாறு:-
வால்பாறை-22 மி.மீ., மேல் நீராறு- 31, கீழ் நீராறு-22, பரம்பிக்குளம்-7, சோலையாறு அணை-18 மி.மீ. ஆகும். 


Next Story