ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் 1.1.2020 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 70 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். குடும்ப நல நிதியினை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் கூட்டமைப்பு முருகேசன், போக்குவரத்து அமைப்பு பவுல்ராஜ், மின்வாரிய அமைப்பு ராமச்சந்திர பாபு, கணேசமூர்த்தி ஆகியோர் பேசினர்.இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் முகமது சீது நன்றி கூறினார்