கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலி
நாமக்கல், செப்.8-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 477 ஆக அதிகரித்து உள்ளது.
2 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 475 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் அன்புநகர் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் மற்றும் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலன்இன்றி இறந்தனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்து உள்ளது.
65 பேருக்கு பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 49 ஆயிரத்து 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 49,217 ஆக அதிகரித்தது.
நேற்று புதிதாக மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 282 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே நேற்று 55 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 233 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 572 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story