கொள்ளையர்களை பிடிக்க4 தனிப்படைகள் அமைப்பு
கொள்ளையர்களை பிடிக்க4 தனிப்படைகள் அமைப்பு
எலச்சிப்பாளையம், செப்.8-
வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நேற்றுமுன்தினம் இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அதாவது, வங்கியின் முன்புற டியூப்லைட்டுகளின் மின்இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களை துண்டித்தும், வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்தும் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன்பிறகு அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த ரூ.30 கோடி நகை மற்றும் பணம் தப்பித்தது.
தகவல் அறிந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 தனிப்படைகள் அமைப்பு
இதற்கிடையே கொள்ளையர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார், புதுசத்திரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகிய 4 பேரின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்பமை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது, இதற்கு முன்பு நடந்த வங்கி கொள்ளையில் தொடர்புடைய நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் வெளி மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story