அகழாய்வில் மேலும் ஓர் சுடுமண் உறைகிணறு தென்பட்டது
கீழடி அருகே அகரம் அகழாய்வில் மேலும் ஓர் சுடுமண் உறைகிணறு தென்பட்டது.
திருப்புவனம்,
கீழடி அருகே அகரத்தில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுடுமண் உறை கிணறு தென்பட்டுள்ளது.
அகழாய்வு
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. |
அகரத்தில் ஏற்கனவே மண்பாண்டங்கள், செங்கல் சுவர், சுடுமண் பொம்மைகள், பெரிய, சிறிய நத்தை ஓடுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. |
அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு குழியில் 4 அடுக்குகளுடன் கூடிய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு 2-வது முறையாக மற்றொரு குழியில் ஆய்வுப்பணி நடைபெற்ற போது, அதிலும் ஒரு சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழியில் தொடர்ந்து தோண்டியதில் 14 அடுக்குகளுடன்கூடிய சுடுமண் உறைகிணறாக காணப்படுகிறது. |
3-வது சுடுமண் உறை கிணறு
இந்த நிலையில் மற்றொரு குழியில் தோண்டிய போது, 8 அடி ஆழத்தில் 3-வதாக இன்னொரு உறைகிணற்றில் மேல்பாகம் வெளிப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதி வட்டவடிவில் ஒரு மூடியைப் போன்று உள்ளது. தொடர்ந்து ேதாண்டும் போது இந்த உறைகிணறு எத்தனை அடுக்குகளுடன் உள்ளது என தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். |
--------- |
Related Tags :
Next Story