நீலகிரி மாவட்ட பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி
கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு பணிகள்
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோதனை சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் நீலகிரியில் கூடுதலாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 97 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இன்னும் சில நாட்களில் மீதமுள்ள மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு இல்லை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சளி, காய்ச்சல் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தகவல் தெரிவித்துவிட்டு பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். வகுப்பறையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடந்து வருகிறது. சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவி வருவதால் நீலகிரியில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, நீலகிரியில் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
ஊட்டி தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர் முன்னதாகவே பள்ளிக்கு வரவில்லை. தொற்று ஏற்பட்டால் சுகாதார குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story