விராலிமலை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தி.மு.க.வினர் வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
விராலிமலை சுங்கச்சாவடியில் பணியாளர்களிடம் கட்டணம் செலுத்த மறுத்து திமு.க.வினர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை
சுங்கச்சாவடி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராசநாயக்கன்பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் மதுரையிலிருந்து சென்னைக்கு ஜீப்பில் சென்றுள்ளனர். அவர்கள் ராசநாயக்கன்பட்டி சுங்கச்சாவடிக்கு வந்தபோது சுங்கக்கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணத்தை செலுத்துமாறு தி.மு.க.வினரிடம் கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தி.மு.க.வினர் வாக்குவாதம்
இதைதொடர்ந்து தி.மு.க.வினர் ஜீப்பை பின்னால் செலுத்தி மற்றொரு வழித்தடத்தில் செல்ல முயன்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் வேகமாக சென்று அந்த ஜீப்பை மறித்து டிரைவருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது டிரைவர் ஜீப்பை எடுக்க முற்பட்டபோது, ஜீப்பின் முன் சக்கரம் ஊழியர் கால் விரலில் ஏறியுள்ளது. இதனைக்கண்ட சக ஊழியர்கள் வேகமாக ஓடிவந்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜீப்பில் இருந்த தி.மு.க.வினர் சுங்கக்கட்டணம் செலுத்துவதாக கூறி பாஸ்டாக் மூலம் கட்டணம் செலுத்திவிட்டு சென்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் இச்சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
Related Tags :
Next Story