தேவகோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆண்டாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42) இவர் அருகே உள்ள அறுநூற்றி வயல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு தேவகோட்டை ராம்நகர் தில்லைநகரில் உள்ளது. சம்பவத்தன்று இந்த வீட்டை பூட்டி விட்டு ஆண்டாவூரணி கிராமத்திற்கு சென்று விட்டார். மாலை வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.