ஆற்றில் தவறி விழுந்து லாரி டிரைவர் பலி
மன்னார்குடி அருகே பாமணி ஆற்றில் தவறி விழுந்து லாரி டிரைவர் பலியானார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே பாமணி ஆற்றில் தவறி விழுந்து லாரி டிரைவர் பலியானார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆற்றில் தவறி விழுந்தார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குறுவைமொழி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஆகாஷ்(வயது 21). லாரி டிரைவரான இவரும், இவரது நண்பர் சபரி என்பவரும் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பாமணி ஆற்றில் மதகு அணையின் மேல் நின்று ஆற்றில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்த்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ் மதகு அணையின் மேல் இருந்து தவறி ஆற்றில் விழுந்தார். உடனே சபரி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். மேலும் மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்றதாலும், ஆகாஷ் தவறி விழுந்த பகுதி ஆழமான பகுதி என்பதாலும் நேற்று முன்தினம் இரவு வரை ஆற்றில் தேடியும், ஆகாசை கண்டு பிடிக்க முடியவி்ல்லை.
உடல் மிதந்தது
இந்த நிலையில் நேற்று காலை ஆகாஷின் உடல் ஆற்று நீரில் மிதந்தது. இதையடுத்து மன்னார்குடி போலீசார், ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story