துப்புரவு பணியாளர் மர்ம சாவு


துப்புரவு பணியாளர் மர்ம சாவு
x
தினத்தந்தி 8 Sept 2021 12:32 AM IST (Updated: 8 Sept 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் துப்புரவு பணியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றியவர் பாண்டி (வயது 55).இவர் சிவகங்கை செந்தமிழ் நகரில் உள்ள நகராட்சி காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாண்டி சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக பாண்டியின் மனைவி காவேரி என்பவர் சிவகங்கை நகர் போலீசில் உழவர்சந்தை அருகில் வசிக்கும் சேகர் என்பவர் தாக்கியதால் தன்னுடைய கணவர் பாண்டி இறந்ததாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக பாண்டியின் இறப்பை மர்மசாவாக கருதி சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story