ரூ.23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Sept 2021 1:13 AM IST (Updated: 8 Sept 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ரூ.23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

செம்பட்டு,செப்.8-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துமணி (வயது 36) என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து 475 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும்.

Next Story