விவசாய பணிகள் மும்முரம்
வத்திராயிருப்பு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முதல் போகம்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது கோடை அறுவடை பணி முடிவடைந்த நிலையில் முதல் போக நெல் நடவு செய்வதற்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களை தயார் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கக்கூடிய நெல் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நெல் சாகுபடி
தற்போது முதல் போக நெல் சாகுபடிக்காக நெல் நாற்று நடுகை செய்வதற்கு தயாராகி வருகிறோம். நெல் நடவு செய்வதற்கு விவசாய நிலங்களில் உழவு செய்து, தொழி அடித்துள்ளோம்.
வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்த மழையால் கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த வருடம் முதல் போக நெல் சாகுபடியை மிகவும் சிறப்பாக தொடங்க உள்ளோம். இந்த ஆண்டு என்.எல்.ஆர், ஏ.எஸ்.டி. 16, கர்நாடக பொன்னி, வி.ஜி.டி, சி.கே.எம். 13, 25 வருடங்களுக்கு பிறகு ஐ.ஆர்.20 வகை நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story