மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா


மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Sept 2021 2:25 AM IST (Updated: 8 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந்தேதியன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரீத்தாபுரம் பகுதியில் ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஒரு மாணவர்
இதற்கிடையே சுகாதாரத்துறை சார்பில் 5 நாட்களுக்கு முன்பு முன்சிறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை  நடந்தது.
அப்போது பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. அதைத்தொடர்நது சக பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதில், வேறு யாருக்கும் கொரோனா இல்லை. தொற்று பாதித்த மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர் பலி இல்லை
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று புதிதாக 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதேசமயம் கொரோனாவுக்கு உயிர்பலி எதுவும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story