போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 2:27 AM IST (Updated: 8 Sept 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாத்திடவும், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து பேசி முடித்திடவும் அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று வரவு செலவை ஈடுகட்டும் வகையில் நிதி வழங்கிடவும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிடவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிடவும், தேர்தல்கள் வாக்குறுதியின்படி 2003-க்கு பின் பணியில் சேர்ந்த புதிய பணியாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திடவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


Next Story