1 அடி உயர விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
தஞ்சையில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயர விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சையில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயர விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைகளை அரசு நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை எழுப்பி வருவதோடு, போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
1 அடி உயர மண் சிலை
இந்த நிலையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1அடி உயரத்தில் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. தஞ்சை பூக்காரத்தெரு பகுதிகளில் சாலையோரத்தில் இந்த சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்களில் களிமண் எடுத்து வரப்பட்டு அச்சு மூலம் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு விநாயகர் சிலை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதனை எளிதில் வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்யவும், நீர் நிலைகளில் கரைக்கும் வகையிலும் இந்த சிலைகள் வர்ணம் பூசாமல் களிமண்ணால் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story