மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி மாயம் + "||" + School student missing

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்
பள்ளி மாணவி மாயமானார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 14). இவர் கல்லாத்தூர்-தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லாத்தூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை கடைவீதி, பஸ் நிறுத்தம் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான புவனேஸ்வரியை தேடி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவிக்கு பாலியல் தொல்லை: கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
2. தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி சாவு
பொன்னேரியில் தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
3. தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
தாய் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
4. மின்சாரம் தாக்கி மாணவி சாவு
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி ஆனார்.
5. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.