மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Sept 2021 2:40 AM IST (Updated: 8 Sept 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 பேர் காயமடைந்தனர்.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த வீராசாமியின் மனைவி லட்சுமி(வயது 40). இவரது மகள் அபி. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அபியுடன், லெட்சுமியின் அக்காள் மகனான வினோத்(20) ஒரு மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் நோக்கி சென்றார். அப்போது பால வேலை நடந்துவரும் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் அபிக்கு பலத்த காயமும், வினோத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டது. அவர்கள் 108 ஆம்பலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story